Monday 13 February 2012

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
    நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
  (படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
   எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே !  இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற  கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........