Wednesday 13 July 2011

சென்னை நகர பேருந்து எண் மற்றும் அதன் வழித்தடமும்.

சென்னை நகரில் பேருந்து வழிதடம் புரியாமல் தவித்தவர்களில் நானும் ஒருவனாய் இருந்தேன்.  ஆதலால் இந்த இடுகை உடன் .DOC வடிவில் பேருந்து வழிதடம், கட்டணம், பயண நேரம் பற்றிய தகவலை இணைத்துள்ளேன்.(பயண நேரம் நகர நெரிசலுக்கு ஏற்ப மாறுபடும்).   கீழ்காணும் இணைப்பில் இருந்து பதிவிறக்கி பயன்பெறவும்.
http://www.4shared.com/document/h32PLQbF/bus_route_no_in_chennai.html

 மேலும் தகவலுக்கு இந்த இணைப்பையும் சொடுக்கி பயன் பெறலாம்.
http://www.mtcbus.org/
 மேலும் தகவலுக்கு இந்த இணைப்பையும் சொடுக்கி பயன் பெறலாம்.
http://en.wikipedia.org/wiki/List_of_MTC_Chennai_bus_routes

Thursday 7 July 2011

கமலின் கவிதை

கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆ(யா)ருக்கும் விளங்காததாம்
அதைப்பயந்ததையுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லையாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்பது
விதியொன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலை மூலம்
குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன் நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி
மன்னர்க்கு தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலிளின்  சினை  சேர்க்குமாம்.
அசுரரை பிளந்த  போல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு  செய்வித்ததும்.
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்.
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்கருளிடும்
பரிவான பர பிரம்மமே.
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு சக்தியை,
மற்றவர் வையு பயங் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டுஎன்று கொள்.
ஆகமக் குளம் மூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிகச்  சலவையும் செய்.
கொட்டடித்து போற்று மணி அடித்து போற்று
கற்பூர ஆரத்தியை,
தையட ஊசியை தையனத் தந்தபின்
தக்கதை தையதிரு.
உயிதிடும் மெய் வழி ஊதாசினித்த பின்
நைவதே நன்று எனின் நை.