Friday, 6 January 2012

மார்க்கங்கள்

கடவுள் இருகின்றாரா? அப்படி இருப்பின்  கடவுள் யார்? அவரை உணர்வதற்கான வழி முறை என்ன? என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் எல்லா எல்லோர் மனதிலும் (மதத்திலும்) உண்டு.இறை தேடலுக்கு அதுவே தோற்றுவாயாகவும் உள்ளது. இறை தேடலுக்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு. அவையாவன .
1 .பக்தி மார்க்கம் .
2  .ஞான மார்க்கம்.
3  .கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம்:
                 இறைவனை சரணடைந்து, இறைவனை சரணாகதி மூலமே அடைதல் சாத்தியம் என   இறைவனை நினைந்து நினைந்து, அவனை போற்றி செய்து இறை உணர்வை அனுபவித்து தேடல் கொள்தலே பக்தி மார்க்கம்.
இதற்கு நல்ல உதாரணம்:
பக்தை மீரா இறைவனை நினைந்து நினைந்து சரணடைதலே நோக்கம் என இறைவனை அடைந்தது.
ஞான மார்க்கம்:
                 அறிவின் மூலம் இறை நிலை யை உய்ய இயலும் என்று, யோகம், தியானம் (அஷ்டாங்க யோகம்)போன்ற முறைகள் மூலம் இறை தேடலை நடத்தி இறைவனை அடைய முயல்வது பக்தி மார்க்கம்.
உதாரணம்:
        ஆதி சங்கரர், மாத்வர் போன்றோர்.
கர்ம மார்க்கம்:
               இது முற்றிலும் மாறுபட்டது, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதை கூற்றின் படி,  தான் செய்கின்ற கருமமே(கர்மம் என்பதன் பொருள் செயல் என்பதாகும் ) இறைவன் என கருதி முழு ஈடுபாடுடன் வேறு எந்த சிந்தனையும் இன்றி, செய்கின்ற கடமையை மிக சிரத்தையுடன் செய்தாலே ஆகும்.

                இவையே மேற்கண்ட மார்க்கங்களின் வரையறை ஆகும்.

No comments:

Post a Comment