Friday, 27 January 2012

தேர்வு செல்கிற நேரத்தில்


தேர்வு நெருங்குகிற நேரத்தில் உங்களுக்கு  வழக்கமான ஒரு அறுவை அறிவுரையாக இல்லாமல் அனுசரணையாக ஒரு நண்பனாய் உங்களோடு சில செய்திகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் உரைக்கு பின் உங்களின் உள்ளீட்டில் சில மாற்றங்களுக்கு நான் உதவியாகவே இருப்பேன். என் உரையோடு கவனித்து இருங்கள் கட்டாயம் பயனளிக்கும். காரணம் இவை அனைத்தும் செயல் முறையில் பயனளித்தவை வெறும் பேச்சு இல்லை. வாய்ப்பு இருப்பின் குறிபெடுங்கள்.
தேர்வை ஒரு தென்றலை போல அணுகுங்கள்:
 நீங்கள்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்வின் பதற்றத்தை உங்களை விட மற்றவர் உங்களுள் ஏற்படுத்தும் வேலையில் இருப்பார்கள். ஒரு போரை போல நினைப்பவர்களே அப்படி பதற்றபடுவார்கள். இல்லை இது தென்றல் போல மென்மையாக கையாள வேண்டிய விஷயம்.

    பதற்றம் ஏற்படும் போது பயம் வரும், பயம் நடுக்கத்தை அழைத்து வரும், நடுக்கம் ஏற்படின் நினைவு தடுமாறும். பயமில்லாமல் தேர்வை சந்திக்கும் போதுதான் வெற்றி எளிமையாக கிடைக்கும். பயம் ஏற்படின் வெற்றியும் கைநழுவி தடுமாறி விழும்.தேர்வில் உங்களின் ஒவ்வொரு வரியும் மதிப்பெண்கள் என்பதை மறக்க வேண்டாம். ஆகவே மிக கவனத்தோடு செயல்படவும்.
அலட்சியம் அதி பயங்கர ஆபத்து:
     பதற்றம் இல்லாமல் இருப்பது வேறு அலட்சியமாக இருப்பது வேறு. திமிர் என்பது வீரம் அல்ல, பணிவு என்பதும் கோழைத்தனம் இல்லை.
     அலட்சியமாக இருத்தல் விபரீத இன்னல்கள் ஏற்படுத்தும் எப்போதும் கஷ்டப்படாமல் இருக்க கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு தான் ஆகவேண்டி உள்ளது.
         



           “துடிபில்லையானால்
            இருதயம் கூட துருப்பிடிக்கும்.
            நெருபில்லையானால்
            சூரியன் கூட கரிப்பிடிக்கும்
எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பார்த்த சிரமங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒப்பீடு மட்டும் வேண்டாமே:
       யாரோடும் ஒப்பீடு வேண்டாம், நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள், உங்களைவிட குறைவானவர்களோடு ஒப்பிட்டால் உங்கள் மனம் சுபீரியரிட்டி குறைபாட்டில் தள்ளிவிடும். உங்களை விட அதிக மாணவர்களோடு ஒப்பிட்டால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை எனும் குறை பாட்டை மனம் ஏற்படுத்தி விடும். உலகில் எல்லோரும் தனித்துவமனவர்களே!
தனித்துவத்தை ரசியுங்கள்.

தாழ்வு மனப்பான்மை தவிர்ப்போம்:
        நீதி அரசர் கற்பக விநாயகம் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி (ஜார்கண்ட் மாநிலம்- ஓய்வு ) நம் காரைக்குடிக்கு அருகே உள்ள கிராமத்து மனிதர் அவர் வெற்றிக்கு காரணம் கேட்டபோது அவர் சொன்னது,
            “ I will achieve, there is nothing which I cannot achieve”
இதை தினமும் சொல்லிக்கொல்வாராம்.ஆம் எல்லாமே சாத்தியம் தான்.
     “தீதும் நன்றும் பிறர்தர வாரா.
படிப்பதில் சில முறைகள்:
படிப்பது சுகமே:
       படிக்கிற பொது கடனுக்கு படிக்காமல் கருத்துடன் படித்தல் வேண்டும். ஈடுபாடு மிக அவசியம். ஏன் புத்தகம் வெறுப்பை அளிக்கிறது எனில் ஈடுபடின்மை மட்டுமே.
ஈடுபாடு வராததற்கு காரணம் அதை பற்றிய அறியாமை. புரிதல் இல்லாமை. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
        தெரியாததை ஏற்றுக்கொண்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியரிடம் கேட்க வெட்கப்பட வேண்டாம். யாரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறக்கவில்லை.எல்லாமே கற்றுக்கொண்டதுதான். ஈடுபாடு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஆர்வம உங்களை உற்சாக படுத்தி வாசிக்க வைக்கும்.

நேரமேலான்மையும் திட்டமிடுதலும்:
       எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் எவ்வளவு நேரத்தில் செய்யவேண்டும் என்கிற சூட்சமம்தான் நேரமேலான்மை.
         பல்லியை கவனித்து இருப்பீர்கள் வேட்டையின் போது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து, சிறு சலனமும் இன்றி முன்னேறி இரையை பிடிக்கும். எந்த கல்விநிருவனமும் பல்லிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை.
சாப்பிடும் போது உணவு தான் உலகம், குளிக்கும் போது தண்ணீர் தான் அபிசேகம், விளையாடும் போது பந்தே உலக உருண்டை,படிக்கும் போது பாடமே வேதம்.
        சோம்பல் சுகம்
        ஒரு ஆண்டை கூட
        ஒரு வாரமாக மாற்றும்.
        சுறுசுறுப்பு ஒரு நாளை
        மாதமாக மாற்றும்.
நொடிகளை வீண் அடிப்பவர்கள் நொடிந்து போவார்.
அதை பயன் படுத்துபவர் ஒரு போதும் தோல்வி இல்லை.
திட்டமிடுதல் மிக அவசியம்
“ பல நூற்றாண்டு வாழ திட்டமிடுங்கள்
நாளையே இறந்து விடுவதாக எண்ணி செயல் படுங்கள்

திட்டமிட்டு செய்யும் செயல் மாற்றம் கொள்ளலாமே தவிர
வெற்றி விட்டு மாறது.
பணிகளை ஒவ்வொன்றாக தொகுத்து, தெளிவாக நேரம் ஒதுக்கி
செய்பவற்றை திருப்தியோடு செய்தால் எல்லா நாளும் கொண்டாட்டமே!

காதுகளுக்கு வேலை கொடுப்போம்:
        கற்றலின் கேட்டல் மிக நன்று, ஆகவே தான் வாயை கூட மூடுவதற்கு ஏற்பாடு செய்த இறைவன் கேட்பதற்கு எப்போதும் திறந்தே இருக்க செய்தான். ஆகவே வகுப்பில் ஆசிரியர் நடத்தும் போது காதுகளுக்கு வேலை கொடுங்கள்.
இரண்டு வகை ஆப்சென்ட் உண்டு,
           1.physically absent
             2.mentally absent
வகுப்பில் இருந்து ஆப்சென்ட் ஆக வேண்டாம். கவனிக்கும் போது தான் சில வார்த்தைகள் உங்கள் சந்தேகங்களை தீர்க்கலாம்.
காட்சிப்படுத்தவும்:
         நேரம் ஒதுக்கி அன்றாடம் என்ன நடந்தது என மனதில் காட்சி படுத்துங்கள், மனம் எல்லா செய்திகளையும் காட்சி களாக மட்டுமே பதிவு செய்கிறதாம். ஆகவே வகுப்பில் என்ன நடந்தது என்பதை மனதில் காட்சி படுத்துங்கள்.இதுவே உங்கள் மனப்பாட சக்தியை உயர்த்தும்.
பதிவு செய்யுங்கள்:
        காட்சி படுத்திய பின் தெளிவாக உங்களுக்கு புரியும் வண்ணம் ஒரு தாளில் குறிபெடுங்கள். எழுதியவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்து விட்டு அடுத்த நாள் வகுப்புக்கு செல்லுங்கள் தொடர்பு விடாமல் இருக்கும். பாடமும் எளிதில் புரியும்.வகுப்பில் விழிப்போடு இருக்க முடியும். முக்கியமாக போர் அடிக்காமல் இருக்கும்.
சோம்பல் தவிருங்கள்:
       எல்லோரும் மிக அழகாக திட்டமிடுவோம் ஆனால் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து விட்டு ஏழு மணிக்கு எழுந்திருபோம். உங்களின் மிக கொடூர எதிரி உங்கள் சோம்பல் மட்டுமே. உங்களுக்கு சுகமாய் தோன்றுமாறு செய்து உங்களை தோல்வி நோக்கி தள்ளும் எதிரி சோம்பல் தான். திட்டமிடும் போதே கவனமாக திட்டமிடுங்கள், ஆறு மணிக்கு தான் முடியும் என்றால் ஆறுமணிக்கு திட்டமிடுங்கள். விரைவில் எழ விரைவில் தூங்க செல்ல வேண்டும் என புரிந்து செயல்படுங்கள்.
துணிவோடு இருங்கள்: 
             “பட்டறை கல் எனில் அடிதாங்கு
              சுத்தி ஆனால் அடி “
எதுவும் முடியும் துணிவோடு இருங்கள். ஒரு போர் வீரன் வெற்றிக்கு பின் சொன்னது.
             “ நான்
               இளைப்பாறும் போதெல்லாம்
               என் வாளை தீட்டிக்கொண்டு இருந்தேன்  
               அதனால் தான் போரில் வெற்றி பெற முடிந்தது
ஆகவே எதையும் எதிர்கொள்ள தயாராய் இருங்கள். ஓய்வு நேரத்தில் கூட உங்கள் வெற்றி பற்றி சிந்தனையோடு இருங்கள்.
மூட நம்பிக்கை ஒழி:

          Fortune Favours to  the brave”
       கடவுள் எபோதும் உழைப்பவர்களுக்கே உதவி செய்வார் ஆகவே உழைக்கிற அனைவருக்கும் வெற்றி உண்டு.
“மெய்வருத்த கூலி தரும் என்பதற்கிணங்க கட்டாயம் வெற்றி கிட்டும் தூரம்தான் உழைக்காமல் எவ்வளவு இறைவனை வேண்டிய போதும் வெற்றி கிட்டாது. மேலும் நேர்மை வழி மட்டுமே திருப்தியான மகிழ்வை தரும். நேர்மை அற்ற வழி சொல்ல முடியாத துயரத்தை வர வைக்கும்.
சுய மதிப்பீடு:
      அறையில் ஆடாவிட்டால் அம்பலத்தில் ஆட இயலாது ஆகவே பல முறை தேர்வை போன்றே எழுதிப்பாருங்கள்.
வைக்கும் அனைத்து மாதிரி தேர்வுகள் அனைத்தையும் இறுதி தேர்வு என்றே கருதி எழுதினால் இறுதி தேர்வு பயமின்றி பதற்ற மின்றி தேன் போன்று சுவைத்து எழுதமுடியும்.

ஏற்றுக்கொள்ள துணிவோம்:
      தேர்வு எழுதிய பின் யார் விமர்சனத்தையும் கேட்காதீர்கள், கணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். முடிவு வந்த பின் கூட வேண்டாம். எது வந்ததோ முழுமையாக ஏற்று அடுத்து நடக்க போவதில் கவனம் செலுத்துங்கள். தெளிவாக முடிவெடுங்கள்.
உங்கள் முடிவில் உங்கள் எதிர் காலம் என்பதை உணர்ந்து முடிவு செய்யுங்கள்.
       வெற்றி மட்டும் கிட்டும் தூரம் தான்.
வெற்றி:
 மனம் என்பது கணணி போன்றது.
 கணணி கூட மனித ஆக்கத்தின் சிறு துளியே!
 என்னை பொருத்தவரை,
கடுமையான உழைப்புக்கு வேண்டுமானால் வெற்றி தோல்வி இருக்கலாம்.
ஆனால்
அர்பணிப்புக்கு வெற்றி மட்டுமே உண்டு.
“Whatever you do
Do it with a sense of perfection
Do it with a sense of satisfaction
Do it with a sense of devotion
Do it with a sense of dedication
Do it with a sense of determination
Then surely,
You will get a Distinction!





No comments:

Post a Comment