Monday, 16 January 2012

கருங்காலி

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில்  கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார்   சொன்னாலும், கருங்காலி மரம்  நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.

No comments:

Post a Comment