Thursday, 26 January 2012

இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பைவிட

உணவுக்கும் சுவைக்கும் உள்ள  தொடர்பினை போல,  உணவு பரிமாறுபவரின் மன நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிற கருத்தை அதிகம் வலியுருத்துகிறவன் நான்.
நான் நினைத்ததை போலவே பலருக்கும் எண்ணம் உண்டு என்பதை  நான் அறிவேன் . உணவு பரிமாறுதல் பற்றி ஒரு சங்க காலப்புலவனிடம் கேட்ட போது அவர் சொல்கிறார்.
"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
  உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
 முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
 கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே." - சீவக சிந்தாமணி.
ஆம் உணவு உபசரித்தலில் தமிழன் வானுயர வளர்ந்த பாரம்பரிய புகழ் பெற்று இருந்த போதும் காலத்தின் சூழலால்
மாற்றங்கள் உள்புகுந்து மனதை மாற்றிடுமோ என பயம் கொள்ள செய்கிறது.
ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனைக்கு விச்வாமித்திரர் வருவதை அறிவிப்பு வந்தது, உணவு உபசரிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனுக்கும் அவரின் வருகை தெரிவிக்கப்பட்டது. விச்வாமித்திரர் மிக கோபக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே, உணவு உபசரிப்பில் ஏதேனும் குறை எனில் உடனே சாபமும் அளிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே, மேலும் பல இடங்களில் உணவு உபசரிப்பில் குறை ஏற்பட்டு பலரையும் சபித்தும்  உள்ளார். இந்த சூழலில் ஸ்ரீ கிருஷ்ணன் அரண்மனைக்கு வருகை புரிந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு உணவருந்த அழைத்து செல்லுமாறு தனது சமையல் காரனுக்கு ஆணையிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த சமையல் காரனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தார். இந்த தகவல் அறிந்த மற்ற அரண்மனை ஆட்கள் வந்து ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனை கேட்டனர், " அவர் சாபம் அளிக்காமல் இருந்ததே ஆச்சர்யம், ஏதேனும் குறை சொல்லி விட்டு தான் போவார் எப்படி வரங்கள் தந்தார்?" என கேட்டதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் சமையல் காரன் சொன்னான்" விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம்  கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்" என்று சொன்னாராம்.

No comments:

Post a Comment