Thursday, 22 December 2011

புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு

நான்கு காட்சிகளைக் கண்டு உலகை வெறுத்து புத்தர் துறவு பூண்டார் என்பது பௌத்த மத நம்பிக்கை. ஆனால் உண்மை வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர். அவரது 'புத்தமும் அவர் தம்மமும்' நூலில் இதைக் காணலாம். அந்த வரலாற்றைச் சுருங்கச் சொன்னாலது இதுதான்:

ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட... நாள் பகை. அப்போதைக்கப்போது பிரச்சினை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சினை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம். முடிவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளோவோ
மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.

இனக்குழு மரபுப் படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அது அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவது.

புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:

" 1. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது.இதற்காகவா  மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்க்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று"
நன்றி அ.மார்க்ஸ் அவர்கள.

No comments:

Post a Comment