என் இனிய உறவுகளே !
மானுட அநீதிக்காக குரல் கொடுக்கும் சுய நலமற்ற, உண்மைக்காக
போராடும் போர் முரசுகளே!
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உங்களை சூழ்ச்சிகளால் உங்களை தோற்கடிக்க பல வழிகள் செய்யப்படலாம், ஆனாலும்
"எண்ணித்துணிக கருமம்.............."
"கருதிய எண்ணம் நிறைவேறும் வரை உழைமின் உழைமின் ............"
எதோ மனித உரிமை மீறப்பட்டதாக, இலங்கை மீது குற்றம் சாற்றி கொண்டு இருக்கிறோம், அது தவறு. காரணம் அது மனித உரிமை மீறல் அல்லவே அல்ல. திட்டமிட்டு மிக தெளிவோடு செய்யப்பட்ட இன படுகொலை.
ஒரு இனப்படுகொலை ஒன்றை , எதோ மனித உரிமை மீறல் என்று சிறிதாக மாற்றி விட வேண்டாம். கொலை வேறு உரிமை மீறல் வேறு .
மேலும் இதை தமிழர் பிரச்சனை என அடையாளப்படுத்தி இதை ஒரு மொழி பேசும் பிரச்சனை என திசை மாற்றும் அரசியல் சூத்திரதாரிகள் இங்கு பல உண்டு. ஆம் இது மானுடத்திற்கு எதிரானது. இந்த வெறி நாய் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக இருப்பது தமிழன். இன வெறி கொண்ட விலங்குகள் , அப்பாவி மக்களை தாக்குதல் நடத்தியுள்ளது,
நண்பர்களே இனி நாற்காலி ஆசை கொண்ட அசடர்கள் உங்களை பகடை ஆக்க முயற்சி செய்யும் கவனம் தேவை.தன் வார்த்தை ஜாலத்தால் வலை விரிக்கும் விவேகம் அவசியம்.
தயவு செய்து உங்கள் போராட்டம் மானுடத்திற்காக என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டியது உங்கள் கடமை, உங்கள் போராட்டம் வெறிகொண்டு தாக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு என்பதை உணர்த்துங்கள்.
"பழங்கதைகள் நமக்குள்ளே பேசுவதிலோர் அர்த்தமில்லை"
உங்களின் அறப்போராட்டத்தை இந்திய மாணவர்கள் அத்துனை பேருக்கும் புரிய வைத்து ஆதரவு திரட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
உறவுகளே நமக்குள் பேதம் இல்லை. அன்பால் மட்டுமே அனைவரும் பிணைந்து இருக்கிறோம். "ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே..."
உங்கள் உடல் பட்டினியால் துவண்டு போகலாம்
உள்ளம் உலை போல் கொதிக்கிறது.
கவலை வேண்டாம் திறந்த வெளி சிறையில் பசியால் செத்து மடிந்த
உறவுகள் போல இனியாரும் பட்டினியால் சாக கூடாது என்பதற்காக.
தோழிகளே நீங்கள் வெயிலில், பசியில் துயர் படுவது புரிகிறது,
ஈழத்தில் இனி ஒரு சகோதரியும் சிங்கள வெறி கொண்ட நாய்களுக்கு
இரையாக கூடாது என்பதற்காக.
கல்லூரி வாசலில் மானுட நீதிக்கு குரல் கொடுக்கும்,
என் பிரிய உறவுகளே
இலங்கை தேசத்தில் பலரும் ரண வேதனையில் துடிக்கும் ஓசை
இனி கேட்க கூடாது என்பதற்காக.
ரோம் பற்றி எரியும் போது பீடில் வாசித்த நீரோ வின் நினைவு வருகிறது
இன்றைய மத்திய அரசின் நிலை.
அரசே எம் மாணவர் சமூகத்தை
"இலவு
காத்த கிளி என்றும் மட்டும்
எண்ணி விட வேண்டாம்
நாங்கள்
தலையணை தயாரிக்கும்
தந்திரம் புரிந்தவர்கள் "

No comments:
Post a Comment